நாம் பிரமிக்கதக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டோம் என்று வேதாகமம் சொல்லுகிறது. சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய பற்களின் வடிவமைப்பை கூட தேவன் கவனமாய் செய்திருக்கிறார். குழந்தைபருவத்தில் நாம் மென்று திண்ண ``பால் பற்கள்’’ கொடுத்தார். நாம் அதை கவனிக்க டாட்டோம் எல்லா பற்களையும் இழப்போம் என்றும் அவருக்கு தெரியும். ஆகவே, மற்றொரு வாய்ப்பாக நிரந்தர பற்களை அவர் கொடுக்கிறார். நம்முடைய உடைமைகளை குறித்த ஒரு பாடம் அது.
நம்முடைய வாழ்வில் இந்த உண்மை சரியே. தேவன் நமக்கு முதலில் ஒரு வாழ்க்கை அல்லது ஜீவியம் தருகிறார். அந்த அருவருப்பான கம்பிளி புழு தன்னை தாங்குகிற மரத்தை அழிப்பது போல, நாமும் நம் ஜீவியத்தை பாழாக்குகிறோம். நாம் அனைவரும் நம் ஜீவியத்தை கெடுத்து போட்டோம் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தான் இயேசுகிறிஸ்து `` நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்- என்றார். எப்படி ஒரு புழு வடிவிலிருந்து வண்ணத்து பூச்சி மறுரூபமாகிறதோ, அதுபோல நாமும் மறுரூமாக வேண்டும். இது சம்பவிப்பதற்கு அந்த புழு முதலில் அழியவேண்டும். சொல்லப்போனால் உன் பார்வையிலேயே நீ ஒன்றுமில்லாதவனாக தாழ்ந்து இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு ``நீங்கள் மனந்திரும்பி சிறுபிள்ளை போலாகாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்’’ ``உங்களில் பெரிய வனாயிருக்கிறவன் எல்லாரிலும் சிறியவனாயிருக்கக்கடவன்’’ = மகனாக தகப்பனாக அல்ல.
வயது வந்த பிறகு, நம்முடைய பெருமையையும், கர்வத்தையும் விட்டு, குழந்தையைபோல தாழ்த்துவது கடினமே. அப்படி நம்மை தாழ்த்துவதின் இரகசியம் என்ன?- பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இதனை ஆராய என்ன சற்றே பொருத்துகொள்வீர்.
சாதாரணமாகவே நம்மை தாழ்த்த தேவனுடைய அற்புதமான சிருஷ்டிப்பை பார்க்க வேண்டும் அதன் பின் இருக்கும் அபாரமான வடிவமைப்பாளரை ஏற்க வேண்டும். விஞ்ஞானிகள், பொறியார்கள், மருத்துவர்களாக நாம் அவர் படைத்ததை கண்டுபிடிக்கவும் அதை போன்றவைகளை உண்டாக்கி எங்கள் கரங்களின் வேலைகளை ஆசீர்வதியும் என்று தான் கேட்க முடியும். அவர் வடிவமைப்பாளர்களின் வடிவமைப்பாளர் மருத்துவர்களின் மருத்துவர் - கர்த்தாதி கர்த்தர்.
கவனியுங்கள். தாழ்மைக்கு எதிர்மறையானது பெருமை, விழுதலுக்கு முன்னானது பெருமை. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார் என்று வேதம் சொல்கிறது . இந்த பெருமை தான் நாம் பாவமில்லாதவர்கள், தகுதியானவர்கள், வசதி படைத்தவர்கள், இளமையும், வலிமையுமானவர்கள், தேவனை பிரியப்படுத்த கூடியவர்கள் நம்முடைய சொந்த தகுதியிலேயே நாளைக்கு கூட பரலோகத்தில் நுழைய முடியும் என்ற சொல்லுகிறது. பாருங்கள், நம்முடைய சொந்த கிரியைகளை குறித்து பரலோகத்தில் பெருமைபடவோ, கர்வமாக இருக்கவோ வழியை தேவன் உண்டுபண்ணவில்லை. பண்ணவுமாட்டார், தேவனை விடுங்கள் எவரும் பெருமையான மனிதனை விரும்புவதில்லை. தாழ்மை சிறந்த குணமென்றால், பெருமை பெரும் பாவமாக இருக்கிறது.
தேவன் பரிசுத்தமானவர், முற்றிலும் அழகும், பூரணமுமானவர் எந்தவொரு அசுத்தமும் தன் சமுகத்தில் அனுமதிக்கமாட்டார். பாவம் விஷமானது உதாரணமாக, ஒரு கலசம் குடிதண்ணீரை உங்களுக்கு குடிக்க கொடுப்பதற்கு முன்பு அதில் ஒரு துளி விஷத்தை உங்கள் கண்களுக்கு முன் சேர்த்தால் அது 99.99 சதவீகிதம் சுத்தமான குடிநீராயிருந்தாலும் நீங்கள் குடிப்பீர்களா?- எந்த மனிதனும் இயல்பான நிலையிலிருந்தால் பருக மறுப்பான். தேவனை பொருத்தமட்டில் அப்படி தான். ஒரேயொரு பாவத்தின் குற்றமிருந்தாலும், மகா பரிசுத்த தேவனின் சமூகத்தில் நாம் நுழைய தகுதியற்றவர்கள். இந்த விஷயம் நம்மை தாழ்த்த வேண்டும்.
இல்லையென்றால் இந்த கேள்விகளுக்கு சவாலிடுங்கள், பொய் பேசினதுண்டா? “ஆம்” என்றால் நிங்கள் யார்? பொய்யன் மற்றவர் பொருளை திருடியதுண்டா? `ஆம்’ என்றால் நீங்கள் யார்? ஆம், திருடன்தான்! (அடக்க முடியாத) மோகம் எதிர்பாலினர் மேல் கொண்டிருக்கிறீர்களா? (ஆணாக இருந்தால், பார்க்க கூடாத இடங்களில் உங்கள் கண்கள் பார்த்ததா? பெண்ணாக இருந்தால், உங்கள் உடம்பை ஆண்கள், ரசிக்க வேண்டுமென்று அரைகுறை ஆடையணிந்தீர்களா? `ஆம்’ என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் யார்? நிச்சயமாக நீங்கள் அவன்/அவளோடு ஏற்கனவே விபசாரம் செய்தாயிற்று! ஏற்கனவே முடிந்தது ஏனென்றால் நம்முடைய ரூபம் நம்முடைய இதயத்திலிருக்கிறது நம் தோலின் கீழல்ல. அதுபோல கோபத்தில் யாரையாவது `முட்டாள்’ என்று அழைத்ததுண்டா? `ஆம்’ என்றால் நீங்கள் யார்? உங்கள் இருதயத்தில் ஏற்கனவே அவனை கொன்று வீட்டீர்கள். நாம் மனசாட்சியுள்ள மனிதர்கள் என்றால் நம்மை இது தாழ்த்தும், பரிசுத்தமும், சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன் நாம் கெட்டுபோனவர்கள் என்று சிந்திக்க வைக்கும் மெய்யாகவே ``நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகி’’ (ரோமர் 3:23, பரிசுத்த வேதாகமம்)
தேவன் நம்முடைய செயல்கள், வார்த்தைகள், எண்ணங்கள் மாத்திரமல்ல, நம்முடைய நோக்கங்களை கூட நியாயந்தீர்க்கிறார். நாம் எவ்வளவு பாவமுள்ளவர்கள் என்று உணரும்போது, மரணத்திற்கு பின் இருக்கும் ஜீவனை குறித்த நம்பிக்கை இன்றி மரித்தவர்களாவோம் (ஏசாயா 6:5 முழு யூத வேதாகமம்) மரித்தவர்களாயிருப்போம் காரணம், மனிதன் உணவின்றி நாற்பது நாள் வாழலாம், நீரின்றி எட்டு நாட்கள் இருக்கலாம், காற்று இல்லாமல் ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது. நாம் உயிரோடு வாழ்கிறோம் என்றால் ஒரே காரணம் நாளை என்ற நம்பிக்கை தான். அந்த வகையில் நாளை நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று அறியாமலிருந்தால நன்றாக தான் இருக்கும். ஆனால் தேவன் நமக்கு நரக அக்கினியை நாளைக்கு வைத்திருக்கிறார் என்றறியும் போது, எல்லா நம்பிக்கையுமிழந்து இன்றைக்கே மரித்து போவோம் அது மிகவும் மோசமான மரணம்.
நம்முடைய சுயம் சாககூடிய இத்தகைய நம்பிக்கை இல்லாத நிலையை தான் தேவன் எதிர்பார்க்கிறார். அப்போது தான் ஒரு இரட்சகர் இருக்கிறார் என்ற நம்முடைய நம்பிக்கையில் தேவன் நம்மை உயிர்ப்பிக்க (மறுபிறப்படைய) முடியும் இரட்சகரை பற்றிய அறிவு, அனுப்பப்பட்டவர், இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டு, நம்முடைய பாவங்களுக்கேற்ற தண்டனை செலுத்தி, நம்மை நீதிமான்களாக்க மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்என்று சொன்னால்தான் வரும். அவர் பேசின இவ்வார்த்தைகள் ஆவியும், ஜீவனுமாயிருக்கிறது. அவைகள் ஜீவனாயிருக்கிறது. ஏனென்றால் நாளை குறித்த நம்பிக்கை தருகிறது. அவ்வார்த்தைகளை செயல்படுத்தும் போது நித்திய ஜீவனை தருகிறது. (மத்தேயு 7: 24-27, பரிசுத்த வேதாகமம்) தேவனின் தியாகமான ஈவு அவர்மேல் நம்பிக்கை வைக்கும் யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு சொல்லப்பட்ட, நற்செய்தியின் வார்த்தைகளை இருதயத்தில் விசுவாசித்து, இயேசுவை ஆண்டவரென்று வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழும்பினார் என்று விசுவாசித்தால் நீ இரட்சிக்கப்படுவாய். மறு பிறப்படைய தேவ ஆவியால் முத்திரிக்கப்பட்டாய் என்று அர்த்தம் (ரோமர் 10: 9, எபேசியர் 1: 13 பரிசுத்த வேதாகமம்) நாளை பற்றிய நம்பிக்கை இப்போது உங்களுக்கு உண்டு. நீங்கள் ஆண்டவருக்குள் நிலைத்து கனி தரும் வரையில் இந்த நம்பிக்கை நித்திய காலமாய் நிலைக்கும்.
அவருக்குள் நிலைக்க நீங்கள் அவரிலும், அவர் உங்களிலும் இருக்க வேண்டும். (யோவான் 15:1-11 பரிசுத்த வேதாகமம்) நீங்கள் உலகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தாலும், அவருடைய பாதுகாப்பில் இருக்கிறோம் என்பதற்கு அச்சாரமாக நாம் அவருடைய ராஜ்யத்திற்குள் பதியப்பட வேண்டும் நீங்கள் அவருக்குள் நிலைக்க வேண்டும் என்ற ஆசையோடு, தேவனுடைய வார்த்தையின்படியான தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் இந்த பதியமாகுதலை நிறைவேற்றுகிறது. அநேகரை குழப்பப்படுத்திய இப்பாடத்தை சற்றே விளக்க என்னை அனுமதியுங்கள். நிங்கள் ஞானஸ்நானம் பெறாதவரை நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களென்று சாத்தான் கூட அங்கீகரிக்க மாட்டான். காரணம் நீங்கள் இன்னும் அவரில் பங்குள்ளவர்களாகவில்லை.
முன்பு சொல்லப்பட்ட பாவத்தினால் உண்டான நம்பிக்கையற்ற நிலையிலே நான் மரித்தேன் என்ற வெளிப்படையாக அறிக்கை செய்யவேண்டும். அடக்கம் பண்ணப்பட அனுமதிக்க வேண்டும். (i.ந. ஞானஸ்நாம் பெற்றும், இன்னும் நம்மில் இருக்கிற சுயத்திற்கு சாக வேண்டும்) இதன்படி உன்னோடு இருக்கிற தேவ ஆவியானவர் உன்னை கழுவி (மன்னித்து) உயிர்பிக்க முடியும். முழுக்கு ஞானஸ்நானத்தினாலே சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்திலே உன்னை சேர்க்க முடியும்.
ஆண்டவர், இதை காரணமாகவே, எளிமையாக வைத்து தேவனுடைய ஊழியக்காரன் மூலமாய் ஜலத்தினால் கழுவப்படவும், உன்னுடைய எல்லா கர்வத்தினின்றும், என்னாலே முடியுமென்ற குணம், தகுதியானவன், அறிவுள்ளவன், புரிபவன், செல்வங்கள், பலம், அந்தஸ்து என்னும் நிலையிலிருந்து தாழ்மைபடவும் விரும்புகிறார். ``இவ்வளவு பெரிதான நித்திய ஜீவனை சாதாரண மனுஷன் கொடுக்கிற முழுக்கு ஞானஸ்நானத்தினால் நான் எப்படி பெறமுடியும்?’ என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். சொல்லப்பட்ட ஞானஸ்நானம் பெற்றுகொள்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சி எளிமையானது என்று ஒப்புக்கொள்கீறிர்கள். ஆம்! இவையெல்லாம் நடக்க நீங்கள் செய்யவேண்டியது. விசுவாசிக்கவேண்டும் இப்பரிவர்த்தனை உங்களுக்கு எளிமையாவதற்காய் இயேசு தம் பட்சத்தில் இரத்தம் சிந்தி தன் உயிரையே கொடுத்தார். தேவன் நம்மை நேசிப்பதினால், நம்மை இரட்சிக்க வழிவகுத்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினால் நிரூபித்தார். தேவன் அனுப்பியவர் மேல் நாம் விசுவாசம் / நம்பிக்கை / மரியாதை வைக்கும்போது தான் இந்த அத்தாட்சி நமக்கு தெரியும்படி தேவன் வடிவமைத்திருக்கிறார். ஆகவே பாருங்கள்- இயேசு மூலமாய் வரும் தேவனுடைய அன்பு மற்றும் கிருபையே இவையெல்லாம் சாத்தியமாக்கிற்று. நம்முடைய கிரியையினாலல்ல. ஞானஸ்நான முறையினாலும் அல்ல.
நீங்கள் கிறிஸ்துவின் கிரியையின் மேல் வைக்கும் விசுவாசம் (நம்பிக்கை) உங்கள் எளிமையான ஞானஸ்நான கிரியை மூலம் தேவனோடு நாம் சரியான ஐக்கியம் கொள்ள செய்கிறது. (ரோமர் 9: 30-33., யாக்கோபு 2: 22 பரிசுத்த வேதாகமம்) ஆகவே அவரை ஆண்டவராக அங்கீகரியுங்கள். அன்பும், மரியாதையும் நாணயத்தின் இரு பக்கங்கள். ``ஒப்புவித்தேன் யாவையுமே’’ என்ற பாடலை பாடுங்கள் அவர் உங்களை சுத்திகரிக்க அனுமதியுங்கள். ஏனென்றால் அனுப்பப்பட்டவர் பரிசுத்தர், நாம் பரிசுத்தரல்ல. அப்போது தான் கிறிஸ்துவில் நாம் பங்குள்ளவர்களாவோம். இப்படி அனைவருக்கும் பொதுவான சுத்திகரிப்பு ஞானஸ்நானத்தின் மூலம் எனக்கு சொந்தமாயிற்று. பெரிய மருத்துவர் தருகிற மருந்து அது காரணம் நீ பாவி (அசுத்தம்) என்றும் கழுவப்படவேண்டும் (மன்னிக்கப்பட) என்று விசுவாசித்தாய். அனுப்பப்பட்ட சுத்தர் உன்னை சுத்திகரிக்க கூடும் என்று அறிந்திருக்கிறாய் ஏனென்றால் அவர் கிறிஸ்துவின் சரீரத்தில் பங்குள்ளவரானவர், மரித்து உயிர்தெழுந்த கிறிஸ்துவிடமிருந்தே அதிகாரம் பெற்றிருக்கிறார். திருமுழுக்கு கொடுக்கிறவர் உபயோகப்படுத்தும் தண்ணீர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறிக்கிறது. திருமுழுக்கு (ஞானஸ்நானம்) என்பது முழுக்கினால் நம் பழைய சுயத்தை நீக்கி புதைப்பதற்கு அடையாளமாய் இருக்கிறது. எனவே நிஜமான இரத்தம் அவசியமில்லை. கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுகிறோம் என்று சொல்லப்படுகிறது ஏனென்றால் இரத்ததிலே ஜீவன் இருக்கிறது.
அது சிந்தப்படுகிறதால், அவருடைய ஜீவன் நமக்கு பதிலீடாக பலியானது. விசுவாசித்து ஞானஸ்நானமெடுப்பது மெத்தையில் படுத்து உறங்குவது போன்றது. மறுபிறப்பு இந்த ஞானஸ்நானம் செய்வதால் உண்டாகின்றது. திருமுழுக்கு (ஞானஸ்நானம்) சரீரத்தின் அழுக்கு நீக்குவதில்லை, கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்ததால் நம் குற்ற மனசாட்சி கழுவப்பட நாம் செய்யும் வேண்டுதலாயிருக்கிறது. (எபிரெயர் 9: 13-14., 1பேதுரு 3: 21பரிசுத்த வேதாகமம்) இப்படி நியாயப்பிரமாணத்தின்படி ஜலத்தினாலும் ஆவியினாலும் நீ பிறந்து பரம இராஜ்யத்திற்குட்படுகிறாய். அதாவது வேத வசனத்தினாலே, நீ ஜலத்தினாலே கழுவப்பட்டாய் (எபேசியர் 5: 26 பரிசுத்த வேதாகமம்) “ஒருவன் கிறிஸ்துவுக் குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்., பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின’’ (ஐஐகொரிந்தியர் 5: 17 பரிசுத்த வேதாகமம்) நீங்கள் எல்லாவற்றையும் புதிய கோணத்தில் பார்ப்பீர்கள் கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்கிருக்கும்!
புதுப்பித்தல் ஆரம்பிக்க முழங்காலிட்டு இந்த எளிய ஜெபம் செய்யுங்கள்: ``ஆண்டவராகிய தேவனே! நான் நரகத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பாவி என்று அறிகிறேன். என்னை நேசிக்கவும் எனக்காய் மரிக்கவும் நீர் அனுப்பிய இயேசுவுக்காய் நன்றி. நீர் என் எல்லா பாவங்களையும் மன்னித்து, கிறிஸ்து இயேசுவின் மூலமாய் புதிதும் நித்தியமான ஜீவனை கொடுத்தீர் என்றும் நம்புகிறேன். இனி உமக்கு உகந்த வாழ்க்கை வாழுவேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்-’’ (செய்வீராக)
நீங்கள் விசுவாசித்து (ஞானஸ்நானத்தினால் ) மரணத்தை கடந்து ஜீவனுக்குள்ளானீர்கள் என்று தெரியுமா?- (யோவான் 5: 24 பரிசுத்த வேதாகமம்) விசுவாசிக்கிறவனின் முழுக்கு ஞானஸ்நானம் - முழுமையாய் அடக்கம் செய்து மீண்டு
|